/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்... தாமதம்; திண்டிவனம்-சென்னை சாலையில் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பு
/
பாலம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்... தாமதம்; திண்டிவனம்-சென்னை சாலையில் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பு
பாலம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்... தாமதம்; திண்டிவனம்-சென்னை சாலையில் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பு
பாலம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்... தாமதம்; திண்டிவனம்-சென்னை சாலையில் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பு
ADDED : நவ 17, 2025 02:03 AM

திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை சாலையில், ரூ.40 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளதால், பாலம் கட்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே சென்னை ரோட்டிலுள்ள சலவாதி கூட்ரோடு அருகே கல்லுாரி புறவழிச்சாலைஅமைந்துள்ளது.இதில் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதி, திண்டிவனம்--சென்னை சாலையிலுள்ள சலாவதி அருகே உள்ளது.
இந்த புறவழிச் சாலையில், திருவண்ணாமலையிலிருந்து புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக வரும் வாகனங்கள் அனைத்தும், சலவாதி கிராமம் அருகே யூ டர்ன் அடித்துதான் திண்டிவனத்தின் உள்ளே வரமுடியும். இவ்வாறு யூ டர்ன் அடித்து வாகனங்கள் திரும்பும் போது,சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் திண்டிவனத்திலிந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றது. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வந்தது.
இதே போல் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில், திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை, வேலுார், செஞ்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை பின் பற்றாமல் புறவழிச்சாலையில் எதிரும், புதிருமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொடர் விபத்துக்கள் நடக்கும் இடமென. சந்தைமேடு புறவழிச்சாலை பகுதி, நாகாயின், தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டது. இதையொட்டி, ஏற்கனவே விபத்து நடக்கும் என அடையாளம் காணப்பட்ட, படாளம், உத்திரமேரூர் கூட்ரோடு,மதுராந்தகம் மற்றும் சலவாதி புறவழிச்சாலை என நான்கு இடங்களில் பாலம் கட்டுவதற்காக நகாய் சார்பில் ரூ.118 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சலவாதி பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக பாலம் அமையும் இடத்தின் இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை போடும் பணிகள் துவங்கியது. , உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் ஒராண்டிற்குள் முடிந்துவிடும் என்று நகாய் தரப்பில் அப்போது தெரிவித்தனர்.
ஆனால் ஓராண்டை கடந்தும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பிரதான போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், அந்தப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகின்றது. குறிப்பாக வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.
இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஓராண்டு முடிந்தும் பணிகள் நடைபெ ற்று வருவது குறித்து, ஒப்பந்ததாரர் தரப்பில் கேட்ட போது,' உயர்மட்ட பாலம் அமையும் இடத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்கள் வருகின்றது. இதற்காக இடங்களை நகாய் தரப்பிற்கு கொடுத்தவர்களுக்கு நஷ்ட ஈடு தரவில்லை.இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு கொடுத்தால்தான், சம்பந்தபட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள முடியும். அதனால்தான் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக' தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம்-சென்னை சாலையில் அமைக்கப்படும் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வி ரைவில் வழங்கி, உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகாய் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

