/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குருவம்மாபேட்டை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரிக்கை
/
குருவம்மாபேட்டை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2025 11:40 PM
விழுப்புரம்: மரக்காணம் அருகே குருவம்மாபேட்டை கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, குருவம்மாபேட்டை கிராம மக்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:
மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள எண்டியூர் ஊராட்சியில் குருவம்மாபேட்டை கிராமம் சேர்க்கப்பட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட குருவம்மாபேட்டை கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்.
இது குறித்து, கடந்த 2019ம் ஆண்டு முதல் கலெக்டர், மரக்காணம் பி.டி.ஓ., அலவலகத்தில் மனு அளித்து வருகிறோம். ஆனால், தனி ஊராட்சியாக பிரிக்கவில்லை. தற்போது, எங்கள் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கிராம ஊராட்சி சபையில் தீர்மானித்து, தனி ஊராட்சியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

