ADDED : மார் 15, 2024 11:09 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் காந்தி சிலை அருகே, வி.சி., சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர்கள் திலீபன், தனஞ்செழியன் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர காங்., தலைவர் விநாயகம், இந்திய கம்யூ., இன்பஒளி, மா.கம்யூ., ராமதாஸ், உட்பட பலர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
