
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மொபைல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, வட்ட தலைவர் சேகர், மாவட்ட குழு அமுதா, நகர தலைவர் பால்ராஜ், வட்ட பொருளாளர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வட்ட துணை செயலாளர் பிரேமா, வட்டக் குழு நாகலிங்கம், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

