/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 30, 2024 06:40 AM

விழுப்புரம் : காணை ஒன்றியத்தில், நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
காணை ஒன்றியத்தில் உள்ள சூரப்பட்டு ஊராட்சியில், மறுசீரமைக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை பார்வையிட்டார்.
கெடார் ஊராட்சியில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி மற்றும் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நுாலக கட்டட பணி, தார்சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பள்ளியந்துாரில் 19.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மாதிரிப்பள்ளி மற்றும் விடுதிகள் கட்டுமானப் பணி, வீரமூர் ஊராட்சியில், நாற்றாங்கால் பண்ணை, உடையாநத்தம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும், இருளர் குடியிருப்பு வீடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, பி.டி.ஓ.க்கள் சிவக்குமார், சீனுவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.