ADDED : அக் 08, 2025 12:27 AM

விக்கிரவாண்டி; சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, தினமலர் -பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களுக்கு பொது அறிவு திறனை மேம்படுத்தவும் விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வாசிப்பு திறன் அதிகரிக்கும் வகையிலும், அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் படுத்தும் விதத்தில் விரிவான தகவல்கள், தினமலர் -பட்டம் இதழ் மூலம் வெளியிடப்படுகிறது. தற்பொழுது மாணவர்கள் ஆர்வமுடன் பட்டம் இதழை படித்து பயன்பெறுகின்றனர்.
இந்த நிலையில், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா தலைமை தாங்கினார்.
ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை வழங்கி பேசினார்.
உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி , தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.