ADDED : அக் 08, 2025 12:27 AM

செஞ்சி; தையூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வல்லம் ஒன்றியம், தையூர் கிராமத்தில் தையூர், கீழ்மாம்பட்டு, சொரத்துார், மேல்சேவூர் ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், சிலம்புசெல்வன் முன்னிலை வகித்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்து தொகுப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவர் சேகர், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, ஆர்.ஐ., கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழசரன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியராஜன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.