/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் 50வது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் 50வது நாளாக காத்திருப்பு போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் 50வது நாளாக காத்திருப்பு போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் 50வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 08, 2025 12:28 AM

விழுப்புரம்; ஊதிய ஒப்பந்த நிலுவையை வழங்கக் கோரி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) மற்றும் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பினர் 50வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி விழுப்புரம் தலைமை பணிமனை முன் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊதிய ஒப்பந்த நிலுவை வழங்க வேண்டும். 17 மாத ஓய்வுகால பலன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று 50வது நாளாக தொடர்ந்தனர்.
சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் வேலு தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பு பொது செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
துணை தலைவர் ரகோத்தமன், மண்டல பொருளாளர் முருகன் சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், வரும் 9ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.