/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 20, 2024 04:55 AM

விழுப்புரம்: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி வினா போட்டி விழுப்புரம், வழுதரெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடத்தியது.
போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.
போட்டியில் 8 ம் வகுப்பு மாணவிகள் ராஜஸ்ரீ, ரம்யா அணி முதலிடத்தையும், 6 ம் வகுப்பு மாணவர்கள் சபரி, அரிகரன் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இதே போன்று, சாலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் மணவாளன் தலைமை தாங்கினார். போட்டியில், 8ம் வகுப்பு மாணவிகள் அபிநயா, அஸ்வித்தா அணி முதலிடத்தையும், 6ம் வகுப்பு மாணவர் முகேஷ், மாணவி மகாலட்சுமி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இரு பள்ளிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சரஸ்வதி கல்வி குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.