ADDED : செப் 05, 2025 09:59 PM

செஞ்சி:
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதிலும், ஏழை, எளிய மக்களின் குரலாகவும் தினமலர் நாளிதழ் விளங்குவதாக மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு என்றும் பாடுபட்டு வருவ துடன், மக்களின் அறியாமையை அகற்றி தமிழகத் தின் வளர்ச்சிக்காக தினமலர் பாடுபாட்டு வருகிறது.
தமிழக மகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நேர்மையோடும், துணிவோடும் செய்திகளை நடுநிலையோடு வெளியிடுவதிலும், ஜனநாயகத்தின் துாணாக இருந்து அரசியல், அறிவியல், மருத்துவம், விளையாட்டு என உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை அனைத்து துறை செய்திகளையும் பாரபட்சமின்றி மக்களிடம் கொண்டு சேர்த்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தனது 75 வது ஆண்டை நிறைவு செய்து பவளவிழா காணும் தினமலர் நாளிதழின் சேவை மேலும் பல நுாற்றாண்டுகள் தொடர வாழ்த்துகின்றேன்.