/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை முயற்சி
/
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை முயற்சி
ADDED : ஜூன் 28, 2025 01:05 AM
விழுப்புரம் : நுாறுநாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக்கோரி, கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், நேற்று கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட துணை பி.டி.ஓ., ஹேமலதா மற்றும் வளவனுார் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, நுாறுநாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு போராட்ட முயற்சியை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.