UPDATED : நவ 21, 2026 06:16 PM
ADDED : நவ 21, 2026 06:16 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
மாநில ஆதிதிராவிட நலக்குழு இணை செயலர் புஷ்பராஜ் வரவேற்றார். வானுார் எம்.எல்.ஏ., கவுதம், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், பேரூர் செயலர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் வாசன், நகர செயலாளர்கள் ஜெயமூர்த்தி, வெற்றிவேல், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், ராஜா, சீனுசெல்வரங்கம், சொக்கலிங்கம், தயாளன், ரவிச்சந்திரன், பழனி, தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், முரளி, மைதிலி ராஜேந்திரன், பாஸ்கர், ராஜி, புஷ்பராஜ், செல்வமணி, கணேசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், பிரேமா குப்புசாமி, ரவிக்குமார், தலைமை பொதுக்குழு சீனுராஜன், சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் விழுப்புரம், வானுார், திண்டிவனம் தொகுதிகளை சேர்ந்த மத்திய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின், 50வது பிறந்தநாள் விழாவை, வரும், 27,ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றியம், நகரம், பேரூர், கிளைகள் என அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, பொது மக்கள், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். முன்னதாக வரும், 26ம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவலாயத்தில் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடக்கும் ரத்ததான முகாமில், கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை கூட்டத்தில் நிறைவேற்றினர்.
