/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
விக்கிரவாண்டியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 30, 2025 11:19 PM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
கிழக்கு ஒன்றியம் சார்பில் சிந்தாமணியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரவிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மீனா, மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், கிளைச் செயலாளர்கள் ராஜ்காந்த், சந்திரன், ரத்தினசபாபதி, கணேஷ், புகழேந்தி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஏரி நீர் பாசன தலைவர் பிச்சை முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
மேற்கு ஒன்றியம் சார்பில் ஈச்சங்குப்பத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, செயலாளர் வேம்பி ரவி தலைமை தாங்கினார்.
பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் முகிலன், அவைத் தலைவர் சீனுவாசன், மாவட்ட பிரதிநிதி வினாயகமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கில்பர்ட்ராஜ், ஒன்றிய துணைசெயலாளர் வெற்றிவேல், விவசாய அணி ராஜா, கிளை செயலாளர்கள் கருணாநிதி, ரமேஷ், ஏழுமலை, செல்வி, ஊராட்சி தலைவி அரசுகுமாரி, மாணவரணி பார்த்தீபன், பூபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய ஒன்றியம்
முண்டியம்பாக்கத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, செல்வம், மாவட்ட மருத்துவர் துணை அமைப்பாளர் தங்கவேல், மகளிரணி துணை அமைப்பாளர் சிவமகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், அசோக் குமார், வேல்முருகன், ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் முரளி, கிளை செயலாளர்கள் சுதாகர், வேல்முருகன், ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.