/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்
ADDED : மார் 15, 2025 08:44 PM
மயிலம்; மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தி திணிப்பு, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
துணை அமைப்பாளர் அண்ணாமலை வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.
ஆரணி தொகுதி எம்.பி., தரணிவேந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தலைமைக் கழக பேச்சாளர்கள் அப்பாஸ், அப்துல் வாகப் அதாய்.
மாவட்ட அவைத் தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், நிவேதிதா, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா.
மயிலம் ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன்,இளைஞர் அணி நிர்வாகிகள் ரமேஷ், பாபு, உதயகுமார், மயிலம் ஒன்றிய இளைஞரணி சம்சுதீன், ரமேஷ், தமிழ்வாணன், செந்தமிழ்ச்செல்வன், ராஜ்,ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.