/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்
/
நின்றிருந்த லாரியில் இறந்து கிடந்த டிரைவர்
ADDED : மே 01, 2025 06:55 AM
செஞ்சி : செஞ்சி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் டிரைவர் இறந்து கிடந்தார்.
செஞ்சி - திருவண்ணாமலை மெயின் ரோடு சத்தியமங்கலம் கிராமத்தில் சிவன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று நின்றிருந்தது. நீண்ட நேரமாக நின்று இருந்ததால் அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் சந்தேகத்தின் போரில் சோதனை செய்தனர். அப்போது லாரியில் டிரைவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
விசாரணையில் இறந்து கிடந்தவர் ராணிப்பேட்டை அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், 46; என தெரியவந்தது. ரமேஷ், தனக்கு சொந்தமான லாரியில் பெருந்துறை சிப்காட்டில் இருந்து மரக்காணத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலத்தில் லாரியை நிறுத்தி உள்ளார். அங்கு நெஞ்சுவலியால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் இறந்தாரா என சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.