/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்
/
மரத்தில் கார் மோதல் டிரைவர் பலி: 4 பேர் காயம்
ADDED : டிச 24, 2024 06:18 AM

மயிலம்: மயிலம் அருகே உள்ள மரத்தில் கார் மோதிய விபத் தில் டிரைவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த தனியார் கேட்டரிங் நிறுவன பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்திற்கு மாருதி ஆம்னி காரில் புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்தபோது, கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் டிரைவரான அப்துல் ரகீம்,65; உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்த ராயபுரம் அகமது பாஷா,29; பழைய வண்ணாரப்பேட்டை குமார, 31; ஷாகிசா,35; ரபிக்,34; ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.