/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி அடித்து கொலை போதை கணவர் கைது
/
மனைவி அடித்து கொலை போதை கணவர் கைது
ADDED : ஏப் 14, 2025 06:49 AM

செஞ்சி, ஏப். 14-
குடிபோதையில், மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த முருகன்தாங்கல், தாமரைகுளம் கட்டையன் மகன் தங்கராசு, 29; கூலித் தொழிலாளி.
இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை தங்கராசுவின் தாய் வளர்த்து வருகிறார்.
தங்கராசு, ஒராண்டிற்கு முன்பு செங்கல்பட்டில், செங்கல்சூளையில் வேலை செய்தபோது உடன் வேலை செய்த செஞ்சி அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தன்னை விட 5 வயது மூத்த சின்னபொன்னு 34; என்ற விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சின்னபொன்னுவிற்கு, 15 வயது, 11 மற்றும் 9 வயதில் 3 மகன்கள் உள்ளனர்.சின்னபொன்னு தனது மகன்களை செவலபுரையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்க வைத்துள்ளார்.
கடந்த சில மாதமாக தங்கராசுவும், சின்னபொன்னுவும் செஞ்சி பகுதி செங்கல்சூளையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகன்தாங்கல் வீட்டிற்கு வந்தனர். அங்கு, தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக சின்னுபொன்னு கூறியதால் இருவருக்கும் இடையே இரவு 10:00 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போதையில் இருந்த தங்கராசு கட்டையால் தாக்கியதில், தலைமையில் காயமடைந்து சின்னபொன்னு உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று சின்னபொன்னுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர்.