/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : மார் 02, 2024 10:53 PM
விழுப்புரம்: விழுப்புரம் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதம் தோறும் காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
வரும் 5ம் தேதி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 12ம் தேதி கண்டமங்கலத்திலும், 19ம் தேதி செஞ்சியிலும், 26ம் தேதி திண்டிவனத்திலும் நடக்கிறது.
மின் நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் தினத்தில் அரசு விடுமுறை நாளாக இருந்தால், விடுமுறைக்கு அடுத்து வரும் பணி நாளில் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

