/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ-நாம் திட்ட பணம் பட்டுவாடா கருத்து கேட்பு கூட்டம்
/
இ-நாம் திட்ட பணம் பட்டுவாடா கருத்து கேட்பு கூட்டம்
இ-நாம் திட்ட பணம் பட்டுவாடா கருத்து கேட்பு கூட்டம்
இ-நாம் திட்ட பணம் பட்டுவாடா கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஆக 02, 2025 11:16 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில், இ-நாம் திட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளை பொருட்களை ஏலம் எடுக்கும் வியாபாரிகள், அரசு விதிகளின் படி, இ-நாம் திட்டத்தில், நேரடியாக விவசாயிகளிடம் பணம் பட்டுவாடா செலுத்துவதில் பிரச்னைகள் எழுந்தன. இந்நிலையில் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வியாபாரிகள், இ-நாம் முறையில் நேரடி பணப்பட்டுவாடா செய்வது குறித்தும், அதில் உள்ள சிரமங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், பணப்பட்டுவாடா செய்யும்போது, வலைதளத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து சரியான வங்கி கணக்கு விவரங்களை பெற்று வழங்க வேண்டும்;
வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இருப்பின், பணம் செலுத்தியவரின் வங்கி கணக்கிற்கு விரைந்து திரும்ப வேண்டும்; திட்டத்தினை எளிமையாக செயல்படுத்த வியாபாரிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும்; விளைபொருட்கள் மற்றும் விற்பனைக்கூட வாரியாகவும், தனித்தனியே பணப்பட்டுவாடா செய்திட, இ-நாம் போர்ட்டலை எளிமைப்படுத்த வேண்டும்; என வியாபாரிகள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, இ-நாம் செயலியினை மேம்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பிரச்னை தீரும் வரை, மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பழைய நடைமுறைப்படி, விளை பொருட்கள் ஏலம் நடைபெற வியாபாரிகள் ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், விற்பனைக்குழு செயலர் சந்துரு, வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் குபேரன், செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.