/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
/
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
ADDED : நவ 12, 2025 10:35 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தார்.
பெரியதச்சூர் அடுத்த ஈச்சங்காட்டை சேர்ந்த துலுக்கானம் என்பவரது மனைவி அமராவதி,76:இவர் கடந்த சில மாதங்களாக சற்று மன நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.கடந்த 11 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று காலை 9 மணியளவில் ஜானகிராமன் என்பவரது நிலத்து பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியை வலது கையால் பிடித்து தொங்கியபடி இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாரிய ஊழியர்கள் உதவியோடு மின்சாரத்தை நிறுத்தி அமராவதி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார்வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

