/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடல் நலக்குறைவு: எஸ்.எஸ்.ஐ., மரணம்
/
உடல் நலக்குறைவு: எஸ்.எஸ்.ஐ., மரணம்
ADDED : நவ 12, 2025 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: உடல்நலமின்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
விழுப்புரம் தேவநாத சுவாமி நகரை சேர்ந்தவர் பழனி,53: இவர் விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தார். கடந்த 10ம் தேதி அன்று உடல் நலக் குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அதிகாலை 5.00 மணிக்கு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கபப்ட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மனைவி ஆனந்தி புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

