/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 10:33 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் முகிலன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜரத்தினம் வரவேற்றார். துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், செல்வநாயகி, பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் இளங்கோ பிரபு, துணைத் தலைவர் பொன்முடி, பொருளாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை அளித்தபடி, அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

