நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ஜாக்கம்பாட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு சாலையை கடந்து சென்ற அடையாளம் தெரியாத 70 வயது மூதாட்டி மீது விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்த மூதாட்டி சிகப்பு நிற சேலையும், பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

