/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பம் பகுதியில் மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
/
கோட்டக்குப்பம் பகுதியில் மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
கோட்டக்குப்பம் பகுதியில் மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
கோட்டக்குப்பம் பகுதியில் மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
ADDED : டிச 01, 2024 06:51 AM

கோட்டக்குப்பம் : 'பெஞ்சல்' புயல் தாக்கத்தால் கோட்டக்குப்பம் பகுதியில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பெஞ்சல் புயலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்புத்துப்பட்டில் இருந்து ஒழிந்தியாம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில், கழுப்பெரும்பாக்கம் சந்திப்பில் மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
இ.சி.ஆரில் சின்ன கோட்டக்குப்பம் சந்திப்பில், தாழ்வான பகுதிகளில் இருந்து வந்த மழை நீர், சாலையில் குளம் போல் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். பெரிய முதலியார்சாவடி ஆரோவில் செல்லும் சாலை சந்திப்பில் அதிகளவில் மழைநீர் சூழ்ந்ததால் ஒரு பக்க சாலை மூடப்பட்டது.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக சென்ற லாரிகள், காற்று மழை காரணமாக மேலும் செல்ல முடியாமல் நீண்ட துாரத்திற்கு நிறுத்தப்பட்டன.
சின்னக்கோட்டக்குப்பத்தில் இருந்து ஆரோவில் செல்லும் பழைய ரோட்டில் தனியார் கெஸ்ட் அவுஸ் எதிரில் இருந்த வேங்கை மரம் வேரோடு முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. அதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

