/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி
/
ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி
ADDED : அக் 13, 2025 12:32 AM

திண்டிவனம்; திண்டிவனத்தில் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி மற்றும் சுகாதார அமைப்பு திட்டம் அறிவுறுத்தலில், 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும், தனியார் நிறுவனத்தின் மூலம், ஓட்டுநர்களுக்கு அவசரகால முதலுதவி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து வட்டத்தில் ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி திண்டிவனம் புறவழிச்சாலை, தனியார் ஓட்டலில் நடந்தது.
இதில் கலந்துகொண்டவர்களுக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும் பயிற்சியாளர்கள் பசிபீவ்லா, சேவகமூர்த்தி, மாவட்ட மேலாளர் ராஜசேகர் மற்றும் மோகன்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஓட்டுநர்களுக்கு அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி குறித்த கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஓட்டுநர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், 108 ஆம்புலன்ஸ் மேற்பார்வையாளர்கள் ராஜேஷ்குமார், பிரவீன், அஜித் மற்றும் ஊழியர்கள் பழனி, ஞானவேல், சசிகுமார், சரண்ராஜ், ஜெயசூர்யா, சந்திரபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.