ADDED : ஏப் 17, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தில், கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 20 லட்சம் மதிப்பிலான 50 சென்ட் நிலம், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தது. ஆக்கிரமித்து கட்டிய கடைகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில், செயல் அலுவலர்கள் ஜெயக்குமார், வேலரசு, அருள் மற்றும் ஆய்வாளர் லட்சுமி, பல்லவி உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்துறை, காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.