/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் பொறியாளர் தின விழா
/
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் பொறியாளர் தின விழா
ADDED : செப் 20, 2024 09:47 PM
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் பொறியாளர் தின விழா நடந்தது.
முதல்வர் சக்திவேல் தலைமை தாங்கி பொறியாளர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில், பொறியாளர்களின் பங்கு பற்றிய நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தியதுடன், தங்களது தொழில்நுட்ப அறிவை சோதிக்கும் போட்டிகளில் பங்கேற்றனர்.
சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.