/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு பிரசாரம்
/
செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஆக 14, 2025 01:08 AM

விழுப்புரம் : செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, கலெக்டர் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று காலை செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உணவுப் பாதுகாப்பு துறை சார்பில், விழுப்புரம் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டம், ஊட்டசத்து குறித்து மக்களிடையே சமூக மற்றும் நடத்தை மாற்றத்தை கொண்டு வருவதற்காக, டில்லியில் உள்ள என்.சி.ஐ.எஸ்., அமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பிரசாரம், ஊட்டச்சத்தை பாதுகாத்தல், மீள் தன்மையை மேம்படுத்துதல் என்ற திட்டத்தின் ஒரு பகுதி.
ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகளை தடுப்பதும் செறிவூட்டப்பட்ட உணவுகளை பயன்படுத்துவதன் ஆரோக்கிய நன்மைகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவவும், அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசார வாகனம் தொடர்ந்து 10 நாட்களுக்கு, 40 கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.