/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில கால்பந்து போட்டி விழுப்புரம் அணி முதலிடம்
/
மாநில கால்பந்து போட்டி விழுப்புரம் அணி முதலிடம்
ADDED : ஆக 14, 2025 01:08 AM

விழுப்புரம் : மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் விழுப்புரம் அணி முதலிடம் பிடித்தது.
விழுப்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடந்தது. விழுப்புரம் வடக்கு ரயில்வே மைதானத்தில் இரு தினங்கள் நடந்த போட்டியில், விழுப்புரத்தை சேர்ந்த 9 அணிகளும், சென்னை, நாகை, சேலம், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்ட அணிகள் 15 என, மொத்தம் 24 அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தின.
விழுப்புரம் மாவட்ட கல்பந்தாட்ட கழக இணை செயலர் அன்பு போட்டியை தொடங்கி வைத்தார்.
இறுதி போட்டியில், விழுப்புரம் எம்.கே.பிரதர்ஸ் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. நாகர்கோயில் என்.எப்.சி. அணி இரண்டாமிடத்தையும், விழுப்புரம் முருகன் கால்பந்தாட்ட அணி மூன்றாம் இடத்தையும், சென்னை பார்த்தி கால்பந்தாட்ட அணி 4ம் இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், தி.மு.க., இளைஞரணி மணிகண்டன், வழக்கறிஞர் சரவணன், ஸ்ரீபதி, சுந்தர், குமரவேல், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பை, சான்றிதழ்களை வழங்கினர்.