/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தொழில்முனைவோர் ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
விழுப்புரத்தில் தொழில்முனைவோர் ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்
விழுப்புரத்தில் தொழில்முனைவோர் ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்
விழுப்புரத்தில் தொழில்முனைவோர் ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜன 07, 2025 06:23 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில்முனைவோர்களுக்கு, உற்பத்தி பொருள் ஏற்றுமதி வாய்ப்புகள், நடைமுறைகள், அரசு அமைப்புகளால் வழங்கப்படும் ஆதரவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
விழுப்புரம் ராணி கிருஷ்ணா அரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், விவசாயிகள், கைவினைஞர், தொழில் முனைவோர், வணிகர்கள் தம் சந்தையை எல்லைதாண்டி விரிவுப்படுத்தி, உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனவும், ஏற்றுமதிக்கு அரசு ஊக்கமும், வழிகாட்டுதலும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் வெளிநாட்டு வாணிப இயக்குனரகம், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு முகமைகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு முகமைகள், பட்டுவாரியம், ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் ஆகியவற்றின் அலுவலர்கள், வல்லுனர்கள் பங்கேற்று, உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தனர்.
வங்கி அதிகாரிகள், ஏற்றுமதிக்காக வங்கிகள் வழங்கும் கடனுதவி, ஏற்றுமதி தொடர்பாக வங்கிசார் பரிவர்த்தனை நடைமுறைகள் குறித்து விளக்கினர். இதில், கைவினை பொருட்கள் ஏற்றுமதி ஆலோசகர் ஸ்ரீவித்யா, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆலோசகர் ஷோபனா, மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள், கைவினைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.