UPDATED : அக் 27, 2026 04:29 PM
ADDED : அக் 27, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
மரக்காணம்: மரக்காணம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் எழில்மதி தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓங்கூர் தட்சஷீலா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை துறை மாணவிகள் கலந்து கொண்டனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், மின்னணு கழிவுகளை முறையாக கையாளுதல், பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல், இயற்கை வளங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
தொடர்ந்து உயர் நிலைப்பள்ளியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி மரக்காணத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சென்றனர்.
