தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்கள் தொகை கணக்கெடுப்பு: அலுவலர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு: அலுவலர்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு: அலுவலர்களுக்கு பயிற்சி


UPDATED : அக் 27, 2026 05:26 PM

ADDED : அக் 27, 2026 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 05:26 PM ADDED : அக் 27, 2026 04:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2 ம் கட்ட பணிகள் தொடர்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலர்களுக்கான, பயிற்சி வகுப்பு இன்று (அக்.,27) துவங்கியது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக துணை இயக்குநர் ஷேமசுந்தரி, புள்ளியியல் ஆய்வாளர் லட்சுமிதேவி ஆகியோர், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027' முதற்கட்டமாக, வீடு பட்டியல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன.

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, தனி தாசில்தார் ஸ்ரீதேவி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us