/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்து கழகத்தில் சமத்துவ பொங்கல்
/
அரசு போக்குவரத்து கழகத்தில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 17, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டல அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அலுவலர்கள், ஊழியர்கள், போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.