/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2025 11:19 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து குறைகளை கேட்டறிந்தார். மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் குறைகளை தீர்க்க கூட்டத்தில், நிலப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, 26 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் படைவீரர் ஒருவரின் மகனுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் ஆயிஷாபேகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்துகொண்டனர்.