/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
/
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 05, 2025 06:02 AM
விக்கிரவாண்டி: டிட்வா புயல், மழை காரணமாக வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
வீடூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை காரணமாக நீர்வரத்து காரணமாக நேற்று காலை 6:00 மணியளவில் முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29 அடியை (391.384 மில்லியன் கன அடி) இருப்பு இருந்தது.
அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக காலை 6:00 மணியிலிருந்து அணைக்கு வினாடிக்கு 953 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால், அணையில் இருந்து 900 கன அடி உபரி நீர் ஒரு மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.
9:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1853 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 1800 கன அடி உபரி நீர் மூன்று மதகை திறந்து வெளியேற்றப்பட்டது. பகல் 12:00 மணி அளவில் வினாடிக்கு 4,553 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 4,500 கன அடி உபரி நீர் ஐந்து மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.
1:00 மணியளவில் வினாடிக்கு 1,853 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது .இதை அடுத்து அணையின் மூன்று மதகுகளை திறந்து 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
மாலை 4:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 953 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது அணையின் ஒரு மதகை திறந்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

