/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் விவசாயிகள் எச்சரிக்கை
/
ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் விவசாயிகள் எச்சரிக்கை
ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் விவசாயிகள் எச்சரிக்கை
ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் விவசாயிகள் எச்சரிக்கை
ADDED : டிச 05, 2025 05:59 AM
கண்டமங்கலம்: விழுப்புரம் - புதுச்சேரி ரயில் பாதையில் கண்டமங்கலம் அடுத்த சின்ன பாபுசமுத்திரம் ரயில்வே கேட்டை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழு தலைவர் முருகையன் தென்னக ரயில்வே கூடுதல் மண்டல பொறியாளரிடம் அளித்துள்ள மனு:
விழுப்புரம் - புதுச்சேரி அகல ரயில் பாதையில் சின்ன பாபுசமுத்திரம் ரயில்வே கேட் (எல்.சி.என் 29 கேட்) உள்ளது. தற்போது இந்த கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்க முயற்சி எடுப்பதாக அறிகிறோம்.
௧௦க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல வேண்டும். ரயில்வே கேட்டை சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 100க்கும் மேற்பட்டோர் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், கரும்பு, ஆகியவற்றை அறுவடை செய்து டிராக்டர், டிரைலர், லாரிகளில் கொண்டு செல்லவும் மேலும் நெல் அறுவடை இயந்திரங்கள் இந்த ரயில்வே கேட் வழியாக தான் சென்று வர வேண்டும்.
மேலும் சின்ன பாபுசமுத்திரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது, சுவாமி ஊர்வலம் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கும் ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று வருகிறது.
இந்நிலையில் இந்த கேட்டை மூடிவிட்டு சுரங்கப்பாதை அமைத்தால் 10 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகள், பிரசித்தி பெற்ற பிரசித்தி பெற்ற திருவிழா ஊர்வலங்கள் கிராமப்புற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உள்ளது.
எனவே ரயில்வே கேட்டை அகற்றி விட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டால் இப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளை திரண்டு போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

