/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தம்
/
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தம்
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தம்
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தம்
ADDED : நவ 04, 2025 01:24 AM
விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு கடந்த மாதம் 17ம் தேதி முதல் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29.600 அடியில் (424.366 மில்லியன் கன அடி) அணையில் 70.143 சதவீத நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி முதல் அணையில் இருந்து தொடர்ந்து 12 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அணைக்கு நீர் வரத்து இல்லாத காரணத்தால் நேற்று காலை 6:00 மணி முதல் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவதை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். நீர் வரத்து விவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.