sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் எதிர்ப்பு: பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

/

விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் எதிர்ப்பு: பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் எதிர்ப்பு: பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் எதிர்ப்பு: பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

2


ADDED : நவ 04, 2025 01:25 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:25 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலை பூட்டியதால் பரபரப்பு நிலவியது.

திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை 3:00 மணியளவில் விளக்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் விளக்கு பூஜைக்கு முன்பதிவு செய்திருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் 3:00 மணிக்கு முன்னரே கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவிலின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையெடுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் விளக்கு பூஜை நடத்த கோவிலை திறக்கும்படி அறநிலையத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கதவை திறக்க மறுத்ததால் அங்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், நாங்கள் அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் அல்ல. பிரதோஷம் என்பதால் வழிபாடு செய்வதற்கு வந்துள்ளோம் என கதவை திறக்குமாறு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அதிகாரிகள் கதவைத் திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வாசலில் அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அறக்கட்டளை சார்பாக வழிபாடு செய்வதற்கு அறநிலை துறை அனுமதி பரிசீலனையில் உள்ளது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக கோவில் வழிபாடு செய்வதற்கு எந்த கட்டுப்பாடு இல்லை எனக்கூறி கோவிலின் கதவை திறந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us