/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2வது மனைவியின் மகனை குத்தி கொன்றவருக்கு 'கம்பி'
/
2வது மனைவியின் மகனை குத்தி கொன்றவருக்கு 'கம்பி'
ADDED : நவ 04, 2025 01:47 AM

கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குயிலாபாளையத்தை சேர்ந்தவர் இளவயது, 58; காய்கறி வியாபாரி. இவரது மனைவி லட்சுமி. மகள், மகன் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி இறந்துவிட்டார்.
இந்நிலையில், கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து, புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டியில், தாய் வீட்டில் வசித்த ஜெயந்தி, 48, என்பவரை இளவயது மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்தார். ஜெயந்திக்கு அய்யப்பன், 25, என்ற மகன் உள்ளார்.
சரக்கு வேனில் இளவயது, அய்யப்பன் ஊர், ஊராக காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். குடிப்பழக்கம் உடைய ஐயப்பன், அடிக்கடி போதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்
நேற்று முன்தினம் போதையில் வந்த அய்யப்பன், கத்தியை காட்டி மிரட்டி குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். கத்தியை பறிக்க முயன்ற இளவயதுவின் கைவிரல்களில் காயம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இளவயது, கத்தியைப் பிடுங்கி சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அய்யப்பன் இறந்தார். கண்டமங்கலம் போலீசார் இளவயதுவை கைது செய்தனர்.

