/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
/
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 07:05 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலர் கலியமூர்த்தி, மாவட்ட தலைவர் சகாபுதீன் உள்ளிட்ட குழு, அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை மனு:
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் விக்கிரவாண்டி அடுத்த தும்பூர், திருவாமத்தூர், நரசிங்கனூர், சாத்தனூர் மற்றும் பல ஏரிகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து, விளை நிலங்களை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏரிகள் உடைந்து, விக்கிரவாண்டி வேளாண் விற்பனை கூடத்தில் தண்ணீர் புகுந்து, சேமிப்பு கிடங்கிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ளான பருத்தி, நெல், கம்பு மூட்டைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நெல், உளுந்து, மணிலா, காராமணி, சவுக்கு, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. தோட்டக்கலைப் பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, தர்பூசணி, புடலங்காய் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதிகளவில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விற்பனை கிடங்கில் இருந்த பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களும், தறி குழியில் மழைநீர் வந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நிவாரணம் பெற்று வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.