/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனிப்பயிறு விலை குறைவை கண்டித்து விவசாயிகள் மறியல்! திண்டிவனம்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
/
பனிப்பயிறு விலை குறைவை கண்டித்து விவசாயிகள் மறியல்! திண்டிவனம்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
பனிப்பயிறு விலை குறைவை கண்டித்து விவசாயிகள் மறியல்! திண்டிவனம்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
பனிப்பயிறு விலை குறைவை கண்டித்து விவசாயிகள் மறியல்! திண்டிவனம்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 07, 2024 01:17 AM

திண்டிவனம் : பனிப்பயிரு விலை குறைப்பதை கண்டித்து, திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு(மார்க்கெட் கமிட்டி) பல்வேறு பகுதிகளிலிருந்து தற்போது அதிக அளவில் பனிப்பயிர், உளுந்து, மணிலா ஆகியன வருகின்றது.
கமிட்டியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், 100 கிலோ பனிப்பயிர் ரூ.7 ஆயிரம் வரை வியாபாரிகள் மூலம் விலை வைக்கப்பபட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென்று பனிப்பயிரு விலை ரூ.6 ஆயிரத்திற்கு குறைவாக விலை வைக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்த மார்க்கெட் கமிட்டியில் பனிப்பயிறு விற்பனைக்காக போட்டிருந்த விவசாயிகள் ஆத்திரமடைந்து, கமிட்டிக்கு எதிரிலுள்ள திண்டிவனம்-செஞ்சி சாலையில் திடீரென்று நேற்று மாலை 5.00 மணிளவில் சாலை மறியல் செய்தனர்.
மறியல் காரணமாக செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரோஷணை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த விவசாயிகளை சமதானம் செய்து, மறியலை கைவிடச்செய்தனர். 5.30 மணி வரை நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பனிப்பயிறு விலை குறைவை கண்டித்து விவசாயிகள் கமிட்டி கண்காணிப்பாளர் ருக்மணியை(பொறுப்பு) முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் அதிகாரிகள் தரப்பில் விழுப்புரத்திலிருந்து நாளை(இன்று) விவசாய அதிகாரிகள் வருவதாகவும், பனிப்பயிறு விலை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் தரப்பில்,' உள்ளூர் வியாபாரிகளை வைத்து பனிப்பயிறு குறைத்து விலை நிர்ணயம் செய்வதால், வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் மூலம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், இன்று(நேற்று) மார்க்கெட் கமிட்டியில் விலை குறைவாக போட்ட பனிப்பயிறு மூட்டைகளை எடுக்கமாட்டோம். நாளை விலை அதிக அளவில் நிர்ணயம் செய்தால் எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.
சில விவசாயிகள் விலை குறைவாக இருப்பதால் கமிட்டிக்கு கொண்டு வந்த பனிப்பயிறு மூட்டைகளை மீண்டும் வாகனம் மூலம் தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் ஏற்கனவே கடந்த 28ம் தேதி பனிப்பயிறு விலை குறைத்து நிர்ணயம் செய்ததை கண்டித்து கமிட்டி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தற்போது இரண்டாவது முறையாக சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

