/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி நேரத்தில் போக்குவரத்து பணியில் போலீசார் இல்லாததால் விபத்து அச்சம்
/
பள்ளி நேரத்தில் போக்குவரத்து பணியில் போலீசார் இல்லாததால் விபத்து அச்சம்
பள்ளி நேரத்தில் போக்குவரத்து பணியில் போலீசார் இல்லாததால் விபத்து அச்சம்
பள்ளி நேரத்தில் போக்குவரத்து பணியில் போலீசார் இல்லாததால் விபத்து அச்சம்
ADDED : அக் 21, 2024 10:53 PM
விழுப்புரத்தில் பள்ளி நேரங்களில் டிராபிக்கை சீரமைக்க போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
விழுப்புரம் நகர பகுதிகளில் தினந்தோறும் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்பும் தொடர் கதையாக உள்ளது. இதை யொட்டி, போக்குவரத்து போலீசார் நகரின் முக்கியமாக போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் காலை, மாலை பள்ளி மற்றும் பணிக்கு செல்வோர் நேரங்களில் டூட்டியில் ஈடுபட்டு டிராபிக்கை சீரமைத்து வாகனங்களை அனுப்புவது வழக்கமாகும்.
தீபாவளி பண்டிகை நெருங்கிய தருணத்தில், விடுமுறை முடிந்து நேற்று பள்ளி துவங்கிய வாரத்தின் முதல் நாளில், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பானாம்பட்டு பாதையருகே போக்குவரத்து போலீசார் டிராபிக்கை சீரமைக்கும் பணியில் இல்லை.
இதனால், மாலை 4.00 மணிக்கு பள்ளி விட்ட நேரத்தில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு தாறுமாறாக சாலையை கடந்து சென்றனர்.
இந்த நேரத்தில் தனியார் பஸ்களும் தாறுமாறாக சென்றதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.
போக்குவரத்து போலீசார் விழுப்புரம் நகரில் பள்ளி நேரங்களில் மட்டுமாவது டிராபிக்கை சீரமைக்கும் பணிகளில் ஒழுங்காக ஈடுபட, எஸ்.பி., தீபக்சிவாச் அறிவுறுத்திட வேண்டும்.