ADDED : ஏப் 17, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் அவலுார்பேட்டை கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து தடுக்கும் முறைகளை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
தீ விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.
இதேபோல், கோவில்புரையூர், தாயனுார் கிராமங்களிலம் விழிப்புணர்வ நிகழ்ச்சி நடந்தது.