/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 10, 2025 11:08 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த வகையில், விழுப்புரம் தீயணைப்பு அலுவலகம் சார்பில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை சுமதி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில், முன்னணி வீரர்கள் ஷாஜகான், பிரபு உள்ளிட்ட தீயணைப்பு குழுவினர், தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்கம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.