/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருமுறை நடந்த தீயணைப்பு நிலைய திறப்பு விழா; அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டதால் பரபரப்பு
/
இருமுறை நடந்த தீயணைப்பு நிலைய திறப்பு விழா; அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டதால் பரபரப்பு
இருமுறை நடந்த தீயணைப்பு நிலைய திறப்பு விழா; அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டதால் பரபரப்பு
இருமுறை நடந்த தீயணைப்பு நிலைய திறப்பு விழா; அ.தி.மு.க.,வினர் முந்திக்கொண்டதால் பரபரப்பு
ADDED : அக் 14, 2025 07:40 AM

கண்டமங்கலம்; கண்டமங்கலத்தில் ஒரே நாளில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் தனித்தனியாக போட்டி போட்டு தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, பண்ணக்குப்பத்தில் தனியார் கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக துவங்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, நேற்று மாலை மாலை 2:00 மணிக்கு திறப்பு விழா நடத்த தி.மு.க., அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பகல் 12:30 மணியளவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
இதனையறிந்த தி.மு.க.,வினர் விழா நடந்த இடத்திற்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளை 'டோஸ்' விட்டனர்.
அதையடுத்து, மாலை 3:15 மணிக்கு தி.மு.க., சார்பில் மீண்டும் திறப்பு விழா நடத்தப்பட்டது. ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் திறந்து வைத்து, தீயணைப்பு நிலைய வாகன சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சீனு செல்வரங்கம், செல்வமணி, ஊராட்சி தலைவர்கள் பிரியதர்ஷினி முருகன், தனம்அருளரசன், துணை சேர்மன் நஜுராபேகம் தமின், மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம்.
விழுப்புரம் தீயணைப்பு நிலைய மாவட்ட மண்டல துணை இயக்குநர் தென்னரசு, மாவட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட உதவி அலுவலர் ஜமுனா ராணி, சிறப்பு நிலைய அலுவலர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒரே நாளில் தீயணைப்பு நிலையத்தை அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் என போட்டிபோட்டு திறப்பு விழா நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.