/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் மீட்பு
/
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் மீட்பு
ADDED : டிச 03, 2024 06:59 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அலுவலகத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் அலுவலகத்தில் சிக்கி கொண்ட வீரர்களை ரப்பர் போட் மூலம் மீட்டு மீட்பு படை வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையம் மலட்டாறு ஆற்றோரம் அமைந்துள்ளது. இந்நிலையில் மலட்டாற்றில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் எதிர்பாராதவிதமாக அதிகளவில் தண்ணீர் வரத்தொடங்கியது.
தொடர்ந்து ஆற்றில் நீர் அதிகரித்து வரத் தொடங்கிய நிலையில் அலுவலகம் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றச்சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு உடைத்து தண்ணீரில் அடித்து சென்றது. பின்னர் காலை 6:00 மணியளவில் அலுவலகத்திற்குள் அதிகளவில் வெள்ளம் புகுந்ததால் அலுவலகம் பாதியளவு தண்ணீரில் மூழ்கியது.
இதனால் உள்ளே பணியில் ஈடுபபட்டிருந்த த நிலைய அலுவலர் சுந்தரரேஸ்வரன் உட்பட 17 வீரர்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் மாடியின் மேல் ஏறி . தங்களை பத்திரபடுத்தி கொண்டனர்.
இதுபற்றி தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள்களுக்கு தகவல் தெரிவித்து பின்னர் ரப்பர் போட் மூலம் அவர்களை அங்கிருந்து மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
அலுவலகத்தில் இருந்த தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ், நடமாடும் ஆம்புலன்ஸ், கார் மற்றும் 17 பைக்குகள் நீரில் மூழ்கி, நாசமானது.