/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2024 07:02 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சந்திரா தலைமை வகித்தார். இணை செயலர்கள் அருளரசி, ரெஜினா, தனஞ்செயன், வாசுகி முன்னிலை வகித்தனர். மாநில செ யற்குழு உறுப்பினர் புனிதா வரவேற்றார். மாவட்ட செயலர் மலர், கள்ளக்குறிச்ச மாவட்ட தலைவர் தாஜ்நிஷா கோரிக்கை விளக்கி பேசினார். சத்துணவு ஊழியர் சங்கம் நாகராஜ், துணை தலைவர் அபராஜிதன், ஓய்வூதியர் சங்கம் ரத்தினம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சத்துணவு திட்டத்தில் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும், அரசின் காலி பணியிடங்களில் சத்துணவு பணியாளர்களை 50 சதவீதம் பேரை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

