ADDED : டிச 09, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கொடியம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு,முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமாரவேலவன் முன்னிலை வகித்தார்.
செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், ஊராட்சி தலைவர் சந்திரலேகா, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, நிர்வாகிகள் அமராவதி, அரிகிருஷ்ணன், காளி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த மருத்துவகுழுவினர், முகாமில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பரிசோதனை நடத்தி, மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.

