/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு
/
ஏரிகள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார் மனு
ADDED : டிச 09, 2025 04:02 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் பொது இடங்கள், ஏரிகள் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிராம மக்கள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
கப்பூர் கிராமத்தில், குறிப்பாக ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்கள், குடிநீர் மற்றும் கழிவறகைள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், கப்பூர், நெற்குணம் ஏரிகளை துார்வாரி, கரைகளை பலப்படுத்தாமல் இருப்பதோடு, ஏரி பாசன வாய்க்கால் அடைபட்டு விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், இரண்டு ஏரிகளிலும் பலர் ஆக்கிரமித்து நிலமாக்கி பயிரிட்டு வருகின்றனர். இது குறித்து, பல முறை புகார் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

