UPDATED : அக் 24, 2026 05:38 PM
ADDED : அக் 24, 2026 05:36 PM

விழுப்புரம்: விழுப்புரம் சாந்தி தியேட்டர் குடியிருப்பு பகுதியில், நீண்டகாலமாக குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு தொடர்ந்துள்ளது.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ,14வது வார்டு, ரயில் நிலையம் அருகே சாமுண்டீஸ்வரி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில், நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தினசரி குப்பைகள் அகற்றாததால், கடந்த 6 மாத காலமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு மூடப்பட்டுள்ள சாந்தி தியேட்டர் எதிரே உள்ள காலி இடத்தில், பொது மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பைகள் அதிகளவில் தேக்கமடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து, நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், துப்புரவு ஊழியர்கள் மூலம் தினசரி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
